Tuesday, April 6, 2010

பார்த்திபனின் 'குடைக்குள் மழை' யும் 'Karthik Calling Karthik 'கும்

பார்த்திபனின் 'குடைக்குள் மழை' நினைவிருக்கிறதா? (கார்த்திக்
ராஜாவின் மனதை வருடும் இசையை மறக்க முடியுமா?) இடைவேளையின்
போது தன் கூடப் பிறந்தவன் என்று அதிரடியான இன்னொரு பார்த்திபனை
அறிமுகப் படுத்துவார். அவர் செய்யும் லொள்ளு தாங்க முடியாது! படம் முடியும்
போதுதான் தெரியும், தன் அடி மனதில் உள்ள கெட்ட எண்ணங்களுக்கெல்லாம்
ஒரு உருவம் கொடுத்து, இல்லாத ஒரு கூடப் பிறந்தவனைத் தானே உருவாக்கி,
அவனைக் கொலையும் செய்து விட்டதாக பிரமையில் வாழ்வார். கிளைமாக்சில்
டாக்டர் ருத்ரன் நமக்கு எல்லாவற்றையும் விளக்குவார்.

முழுமையாக இல்லா விட்டாலும் இந்த knot சமீபத்தில் வெளி வந்த பர்ஹான்
அக்தரின் 'Karthik Calling Karthik' ஹிந்திப் படத்தில் எடுத்தாளப் பட்டுள்ளது. சிறு
வயதில் தன்னை எப்போதும் மிரட்டி உருட்டி வந்த அண்ணனைத் தான்
அப்போதே கொன்று விட்டதாகக் குற்ற உணர்வில் வாழ்கிறார். கிட்டத் தட்ட
கடைசியில்தான் தெரிகிறது, அவருக்கு சகோதரனே கிடையாது என்று! நடிகர்/
தயாரிப்பாளர் பர்ஹான் அக்தரோ அல்லது கதாசிரியர்/ இயக்குனர் விஜய்
லால்வானியோ நம்ப ஊர்ப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும்! அல்லது
எல்லோருமே ஓரிரு ஆங்கிலப் படத்திலிருந்து ஐடியா எடுத்தார்களோ
தெரியவில்லை! ஹிந்திப் படத்தில் தீபிகா படுகோனும் உண்டு ; இசை ஷங்கர்
எஹ்சான் லோய். ஒரு நடை போய்த்தான் பாருங்களேன்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...