Sunday, May 30, 2010

'மதமா, மரமா?'- சென்னை ஆட்டோக்களில் போதனை

சமீபத்தில் சில நாட்கள் சென்னை செல்ல நேர்ந்தது. ஓரிரு ஆட்டோக்களின் பின்னால்
" மதம் வளர்க்காமல் மரம் வளர்ப்போம்' என்ற போதனை வாசகம் காணப் பட்டது. மதத்தைப் பற்றி யார் வாய் திறந்தாலும் உடனே நாசி துவாரங்கள் புடைத்து விடும் பெரிய மதாபிமானி நான் இல்லைதான். இருந்தாலும் இது எனக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாத அபத்தக் களஞ்சியமாகத் தோன்றுகிறது. இதையே சற்று மாற்றி
" மத வெறி தவிர்ப்போம்; மரங்கள் வளர்ப்போம்"
என்று எழுதினால் அழகுணர்வோடு பலருக்கும் ஏற்புடையதாகவும் இருக்குமே?!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...