Tuesday, September 7, 2010

'கவிக்கோ அப்துல் ரஹ்மான்'

முன்பொரு முறை குமுதத்தில் படித்தது:

கவிக்கோ அப்துல் ரஹ்மான் திரைப் படப் பாடல் எழுதுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. நண்பர் ஒருவர் ' உங்கள் பாடல் சிதைக்கப் படாது' என்று உறுதியளித்து இரண்டு பாடல்கள் அவரை வலுக் கட்டாயமாக எழுத வைத்தார் . முதல் பாடல் ' என்னடி கோபமா? உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா? 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார்? முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது!' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை! இப்போது சொல்லுங்கள் இது மூட நம்பிக்கையா இல்லையா?

சினிமா விரும்பி

Wednesday, September 1, 2010

'பாடலுக்குப் பின்னால் ஒரு கதை'

பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் 'துக்ளக்'கிலும் தொலைக்காட்சியிலும் கொடுத்திருந்த பேட்டிகளில் இருந்து நான் தொகுத்தது:

கவிஞர் முத்துலிங்கத்தின் மேல் அமரர் எம்.ஜி.ஆருக்கு அலாதி பிரியம். ஒரு கால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் இவருக்கு ஒரு பாட்டு கண்டிப்பாக உண்டு. 'மீனவ நண்பனில்' எல்லாப் பாடல்களும் எழுதப்பட்டு விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் தலையிட்டு ஒரு கனவுப் பாடல் முத்துலிங்கத்துக்காக introduce செய்தார். எம்.ஜி.ஆர் போனில் அழைத்த போது கவிஞர் சொன்னார் " எல்லாப் பாட்டும் எழுதி முடிச்சுட்டாங்களாமே?" எம்.ஜி.ஆரின் பதில்: " உன்னை விட்டுட்டு எப்படிய்யா அது முடியும்?!"

கவிஞர் எழுத ஆரம்பித்தார் :

"அழகுகள் உன்னிடத்தில் அடைக்கலம்;
உன் அங்கங்கள் மன்மதன் படைக்கலம் "

இயக்குனர் அமரர் ஸ்ரீதரும் இசை அமைப்பாளர் எம். எஸ். வீயும் கேட்டார்கள் "படைக்கலமா? படைக்களமா?"

கவிஞர் சொன்னார்: "கலம் என்றால் ஆயுதம்; களம் என்றால் யுத்தம் நடக்குமிடம். இரண்டும் எழுதலாம் . நான் எழுதியது படைக்கலம் ."

பிறகு யாரோ கமென்ட் அடிக்கிறார்கள்: "என்னய்யா இது அடைக்கலம் அது இது என்று; பாதிரியார் பேர் மாதிரி !"

கவிஞர் உடனே பாட்டையே மாற்றி எழுதுகிறார்:

"தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ,
நீ... மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ?!

இதைத்தான் இன்று வரை ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் குரலில் நீங்களும் நானும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...