எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பட விமர்சனம் எழுதி விட்டதால், புத்தகத்தை அனுபவித்துப் படித்த நான் 'Five Point Someone' Vs '3 Idiots ' என்ற ஒப்பீட்டை செய்து பார்த்தேன். டிஸ்கி: படத்தைப் பற்றியும் புத்தகத்தைப் பற்றியும் நிறைய spoilers கீழே உள்ளன ! கவனம்!
புத்தகத்தில் கதை நடப்பது ஐ ஐ டியில் நான்கு ஆண்டுகள் , 1991-95 இல் . படத்தில் கதை நடப்பது கல்லூரியில் நான்கு ஆண்டுகள் + வெளியே ஐந்தாண்டுகள், 2000-2009 இல். 2005 இல் Fortis Hospital Noida இருந்ததாக ஞாபகம் இல்லை.
புத்தகத்தில் தன் கதை சொல்லும் ஹரி (மாதவன்), ரயான் (ஆமிர் கான்) மற்றும்
அலோக் (ஷர்மன் ஜோஷி) .
படத்தில் ராஞ்சோ (ஆமிர் கான்), பர்ஹான் (மாதவன்) மற்றும் ராஜு (ஷர்மன் ஜோஷி).
ஒரிஜினலில் புரொபசர் செரியனின் மகள் நேஹாவைக் காதலிப்பது மாதவன். படத்தில் புரொபசர் வைரசின் மகள் கரீனாவைக் காதலிப்பது ஆமிர் கான் .
புத்தகத்தில் கரீனாவுக்கு அக்கா கிடையாது. தற்கொலை செய்து கொண்ட அண்ணன் மட்டும்தான். படத்தில் அக்கா மோனா உண்டு.
புத்தகத்தில் அண்ணனின் மரணம் தற்கொலை என்பது கரீனாவுக்கு மட்டும் தெரியும். படத்தில் மோனாவுக்கும் தெரியும். கரீனாவுக்கு அக்காவே கிடயாது என்பதால், அவருக்கு மருத்துவரல்லாத ஆமிர் கான் பிரசவம் பார்க்கும் அபத்தமும் கிடையாது! (போலீஸ் பிடிக்க மாட்டார்களா?!)
புத்தகத்தில் நல்ல புரொபசர் வீரா உண்டு. படத்தில் நல்ல புரொபசர் யாரும் கிடையாது. எல்லாரும் காமெடி/ வில்லன்தான்.
புத்தகத்தில் மூவரும் கேள்வித்தாள் திருடிய பின் ( Operation Pendulum என்ன த்ரில்லிங் ஆக இருக்கும்!) சஸ்பெண்ட் செய்யப் படுகிறார்கள் . இதைத் தாங்க முடியாமல், உண்மையிலேயே பெரிய குற்றம் செய்து விட்ட குற்ற உணர்வால் , ஒன்பதாம் மாடியில் இருந்து குதிக்கிறார் ஷர்மன் ஜோஷி. குண்டாக இருப்பதாலும் , தண்ணீரில் விழுந்ததனாலும் உயிர் பிழைக்கிறார். படத்தில் திருட்டுக்கு முன்னாலேயே புரொபசர் வீட்டில் ஏறிக் குதித்த சிறிய குற்றத்துக்காக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்தும் ஆமிர் கானைக் காட்டிக் கொடுக்க விரும்பாமலும் மூன்றாம் மாடியில் இருந்து குதிக்கிறார் . கதையில் அவர் குதித்தது அவர் அம்மாவுக்கு ரொம்ப நாள் கழித்துத் தான் தெரியும். படத்தில் உடனடியாகவே.
புத்தகத்தில் ஸ்கூட்டர் இருப்பது ஆமிர் கானிடம். கரீனா ஓட்டுவது தந்தையின் கார். படத்தில் மாணவர்களிடம் ஸ்கூட்டர் கிடையாது. கரீனாவிடம் மட்டுமே ஸ்கூட்டர் உண்டு.
கதையில் மில்லி மீட்டர் எனப் படும் சிறுவன் கிடையாது. மாதவனின் பெற்றோர் கிடையாது (வெறும் கோடி மட்டுமே காட்டப் படும்). ஷர்மான் ஜோஷியின் பெற்றோரின் கஷ்டங்கள் படிக்க சோகமாக இருக்கும். படத்தில் அது ஒரு காமெடி என்னும் கேலிக் கூத்து! கதையில் ஆமிர் கானின் பெற்றோர் ஒரு NRI தம்பதி. ஆமிர் அவர்களை வெறுக்கிறார். படத்தில் ஆமிர் ஒரு அநாதை.
இடைவேளையின் போது ஆமிர் கான் பேரில் நடக்கும் ஆள் மாறாட்டம் ஒரிஜினலில் கிடையாது. எனவே ஜாவேத் ஜாப்ரியோ அவர் தந்தையோ கிடையாது.
கதையில் நண்பர்கள் மூவரும் வகுப்பில் கடைசி ரேங்கில் வருவார்கள். அதிலும் ஆமிர் கான்தான் கடைசி. அவருக்கு எந்தக் கம்பெனியிலும் வேலையும் கிடைப்பதில்லை. படத்தில் அவர் மட்டும் முதல் ரேங்க் (சூப்பர் ஹீரோ அல்லவா ?! !) மற்ற இருவரும் கடைசி !
ஒரிஜினலில் ஷர்மான் ஜோஷி பெயிண்டராக விரும்புவார் என்பது லேசாக சொல்லப்படும். படத்தில் மாதவன் வன விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் தொழிலை விரும்புகிறார். கடைசியில் எஞ்சினீயராகாமல் அந்தத் தொழிலையே தேர்ந்தெடுக்கிறார்.
ஹெலிகாப்டர் மாடல் செய்ய முயன்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவன் லோபோ கதையில் கிடையாது. கதையில் முதல் ரேங்க் வாங்கும் வெங்கட் படத்தில் இரண்டாம் ரேங்க் வாங்கும் சதுர் ராமலிங்கமாக வருகிறார். அவர் மேடையில் பேசும் புகழ் பெற்ற 'chamatkaar- balaatkaar' காட்சி கதையில் கிடையாது. படித்து முடித்து ஐந்து ஆண்டுகள் கழித்து எல்லோரும் ஆமிர் கானைத் தேடிக் கண்டு பிடிக்கும் காட்சிகளும் கிடையாது.
கதையில் கரீனாவுக்கு fiance ஓ நிச்சயதார்த்தமோ எதுவும் கிடையாது. ஆமிர் கான் ஸ்கூட்டரில் பெட்ரோலுடன் கலக்கும் lubricant பற்றி ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்வார். படத்தில் எதோ கார் பேட்டரியை வைத்து ஒரு இன்வர்ட்டர் செய்கிறார்.ஸ்கூட்டரை வைத்து நெல் அரைக்கும் மெஷின் செய்கிறார்!
வோட்கா குடித்து விட்டு ஹரி (மாதவன்) புரொபசரிடம் viva voce இல் உளறிக் கொட்டும் தமாஷ் படத்தில் கிடையாது.
எல்லாவற்றையும் விட முக்கியமானது! புத்தகத்தில் கொடூரமான ராகிங்கில் இருந்து சீனியருடன் போராடி தன்னையும் மற்ற இருவரையும் பாதுகாக்கிறார் ஆமிர். மூவருக்கும் நட்பு உருவாகி மென்மேலும் பலப்பட்டதே இந்த சம்பவத்தால்தான். படத்தில் மற்றவர்களுக்கு லேசான ராகிங் முடிந்த பின்னர் ஆமிர் என்ட்ரி கொடுக்கிறார். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள முயன்று வெற்றி அடைகிறார். நட்புக்கு பலமான அஸ்திவாரம் இங்கு பெரிதாகப் போடப் படவில்லை!
கடைசியாக ஒரு வார்த்தை:
படம் மட்டும் பார்த்தவர்கள் கட்டாயம் புத்தகம் படியுங்கள்,
புத்தகம் மட்டும் படித்தவர்கள் கட்டாயம் படம் பாருங்கள்;
இரண்டுமே செய்யாதவர்கள் படம் பார்த்து விட்டுப் புத்தகம் படியுங்கள்!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" 1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன...
-
சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது!...
-
கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார ...
5 comments:
நான் படம் பார்த்தேன்.இந்திதெரியாது.
ஒரளவுக்குப்புரிந்துக்கொண்டேன்.
மனைவிக்குத் தெரியும்.
புத்தகம் படிக்கவில்லை.நான் படத்தைப்பார்த்து உணர்ந்தது.பாதிபடம்
புத்திசாலித்தனமாய் போகிறது.பின் பாதிtypical hindi cinema.அதனால் ஒன்ற முடியவில்லை.The movie is overstretched and exggerated too much.பிரசவம் பார்த்தல்,
ஹாஸ்பிட்டலில் கத்துவது.
ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள் போல் நடத்தை வேறு.
இசை அறுவை.
Good comparison. Whether it is Aamir or anyone else, cinema seems to hv its own grammar..and the hero will have to be the topper, wont he? Unless, of course, the movie makes it to be a virtue to be at the bottom:)
Btw, did u know that this movie was shot at my alma mater - IIMB? Not that the prof.s there would be too pleased to hv it known considering the way profs are portrayed in the movie:)
nanRi Ravishankar!
Thanks Suresh!
I could guess that it is some premiere institute, though I didn't know it is IIMB.
Cinema Virumbi
கதைக்கும் படத்துக்கும் நிறைய வித்தியாசம், கதையின் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைப்படம் தயாரித்திருக்கிறார்கள் ... இரண்டும் ஒன்றல்ல என்பதால் தான் கதை சேடன் பகத் என்று பேர் போடவில்லை.. கதையின் கருவே five point someone by chetan bagath என்று பின்னால் பெயர் போடும் பொழுது வரும்... ஆனால் இரண்டையும் நீங்கள் ரசித்து பார்த்திருக்கிறீர்கள் படித்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது..
நன்றி சூர்ய ஜீவா!
நான் கேள்விப் பட்ட வரையில் சேத்தன் பகத்துக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் Running Credits இல் அவர் பெயரைப் போட்டதுடன் விட்டு விட்டார்கள்! அவரும் சினிமாவுக்குப் புதுசு! ஒன்றும் செய்ய முடியவில்லை!
சினிமா விரும்பி
Post a Comment