'மணிரத்னம் ராமாயணத்தைக் கொஞ்சம் மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கப் போகிறார் போல' என்று ஆவலோடு போய் உட்கார்ந்தால்.......படம் முழுவதும் தேவையே இல்லாமல் எரிச்சலூட்டும் அளவுக்குக் கொட்டும் மழை. படத்தின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் கடத்தப் படுகிறார். அதன் பிறகு இடைவேளை வரையில் கதையில் ஒரு 'இன்ச்' கூட முன்னேற்றம் கிடையாது. சொல்லப் போனால் கடத்தலுக்குப் பிறகு இடைவேளை வரை துண்டு துண்டான காட்சிகள் , எடிட்டர் தூங்கி விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுமளவுக்கு! இயக்குனர் இவற்றை எப்படிக் குலுக்கிப் போட்டாலும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. காட்டுக்குள் சில சமயம் ஐஸ்வர்யாவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். சில சமயம் டோட்டலி ப்ரீ! அடிக்கடி ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் ஆவேசமாக சவால் விட்டுக் கொள்கிறார்கள். மிகுந்த தைரியசாலியான ஐஸ்வர்யா எதற்காக ஆரம்பத்தில் ஒரு முறை மலை மேலிருந்து குதிக்கிறார் என்று தெரியவில்லை. (பிறகு 'புன்னகை மன்னன்' பாணியில் உயிர் தப்புகிறார் என்பது வேறு விஷயம்!) 'நான் துப்பாக்கியை நீட்டும் போது சாவைப் பற்றி இம்மியளவு கூட பயம் இல்லாமல் தைரியமாக என் எதிரே நிற்கும் இந்தப் பெண்ணை நான் எப்படி சுடுவது?' என்கிறார் அபிஷேக். இது ஒன்றும் கம்ப சூத்திர லாஜிக்காகத் தெரியவில்லை! முகத்தில் சில சமயம் மை+ கரி, சில சமயம் சேறு பூசிக் கொண்டு அவ்வப்போது 'பக் பக்' என்பது போன்ற பல முக சேஷ்டைகளைச் செய்கிறார். கடைசியில் ஐஸ்வர்யா அதே 'பக் பக்'கைத் திரும்பச் செய்வது பெரிய காமெடி பீஸ் ! தேவைதானா மணி சார்?!
பிளாஷ் பேக்கில் ஓரளவு அமைதியான, சாதாரணக் குடிமகனான அபிஷேக் திடீரென்று பக்கா காட்டுவாசியானது எப்படி என்று பெரிதாக விளக்கம் எதுவும் இல்லை. ஏதோ காங்கோ நாட்டு வனவாசி போல் செய்திருக்கிறார்கள்! ராமன் கேரக்டரை (ஹிந்தியில் விக்ரம்) ஓரளவு வில்லனாகக் காட்ட முயல்வது தெரிகிறது (அமைதித் தூது பேச வந்த விபீஷணனை சுட்டுக் கொல்கிறார் விக்ரம்;படத்தின் முடிவிலும் அவரிடம் வில்லன் சாயல் தாராளமாகவே தெரிகிறது ). மற்றபடி ராவணன் மற்றும் சீதை கேரக்டர்களைப் பற்றி என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்று சுத்தமாகப் புரியவில்லை. அவரும் மக்களுக்குப் புரிய வேண்டுமே என்று பெரிதாக மெனக்கெடவில்லை. அனுமன் வேடத்தில் கோவிந்தா செய்வது 'கெக்கே பிக்கே' காமெடி. அனுமனுக்கு நல்ல புத்திக் கூர்மை உண்டு என்பார்கள்; இதில் கோவிந்தாவுக்கு அப்படி எல்லாம் ஒன்றும் சிரமம் கொடுக்கவில்லை!
பாடல்களில் ஒன்று கூடப் பொருத்தமான இடத்தில் இல்லை (பிரியா மணியின் திருமணக் கொண்டாட்டப் பாடலைத் தவிர) .படத்தின் நடுவே வரும் பாதி உடைந்த (தசாவதாரத்தில் வருவது போன்ற) ரங்கநாதர் சிலை எதற்கென்றே தெரியவில்லை!
லொகேஷன் அற்புதம், கேமரா தத்ரூபம், டெக்னிகலாக பிரம்மாண்டமாக மிரட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் மிக வருத்தமான உண்மை.இவ்வளவு பிரம்மாண்டமான படத்தில் மனத்தைக் கவர்ந்த விஷயம் எதுவுமே இல்லையா என்றால், சீதை கேரக்டருக்கு மணிரத்தினம் வைத்த பெயர் 'ராகினி' எனக்கு மிகவும் பிடித்தது!
சினிமா விரும்பி
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" 1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன...
-
சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது!...
-
கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார ...
6 comments:
படம் பார்ப்பது என்று வந்து விட்டால், லாஜிக் ஐ ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது நண்பரே ! ( என் கருத்து !)
//லொகேஷன் அற்புதம், கேமரா தத்ரூபம், டெக்னிகலாக பிரம்மாண்டமாக மிரட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் மிக வருத்தமான உண்மை///
ஹ்ம்ம்ம்....
//சீதை கேரக்டருக்கு மணிரத்தினம் வைத்த பெயர் 'ராகினி' எனக்கு மிகவும் பிடித்தது!//
இந்த விஷயம் "ராகினிக்கு" தெரியுமா ?! :)
தேசாந்திரி- பழமை விரும்பி,
நன்றி!
//சீதை கேரக்டருக்கு மணிரத்தினம் வைத்த பெயர் 'ராகினி' எனக்கு மிகவும் பிடித்தது!//
இந்த விஷயம் "ராகினிக்கு" தெரியுமா ?! :)
நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் அப்படி ஒன்றும் இல்லை சாமி! (உடனே நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு எப்படித் தெரியும்னு லொள்ளு பண்ணாதீங்க!)
சினிமா விரும்பி
parthen rasithen....
நன்றி Ananthu!
சினிமா விரும்பி
ராகினி ஏன் பிடித்தது? அதை சொல்லுங்க முதலில்.... ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Dear RVS,
To me, the name 'Raagini' appeared more modern than just plain 'Seetha'. Nothing more! (sonnaa nambaNum!)
nanRi!
Cinema Virumbi
Post a Comment