Monday, February 6, 2012

இந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!'

சமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது! தலைகால் புரியவில்லை! பிறகுதான் புரிந்தது, 'Physically Challenged' என்பதைத்தான் யாரோ ஆர்வக் கோளாறில் இவ்வாறு மொழி பெயர்த்துத் தள்ளி விட்டார்கள்! அதாவது, மாற்றுத் திறனாளியின் மெய் மற்றும் புலன்களை, அவற்றின் செயல்பாட்டைக் கடவுள் (அல்லது சமூகம்) சோதித்து விட்டாராம், 'சமாளி, பார்க்கலாம்' என்று அறைகூவல் (சவால்) விட்டு விட்டாராம். அப்படியே இருந்தாலும் அடுத்தவர் விட்ட அறைகூவலை ஏற்றுக் கொண்டவர் அல்லவா இவர், இவரை எப்படி அறைகூவலர் என்று அழைக்க முடியும்? வேண்டுமானால் 'உடல்/ மன ரீதியாக சவாலை எதிர் கொள்வோர்' என்று மொழி பெயர்க்கலாம். ஓரளவு சரியாக இருக்கும்.

கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!

சினிமா விரும்பி

3 comments:

Arun Ambie said...

:) Really miss Dondu Raghavan at this point. கிழித்துப் போட்டிருப்பார் இந்த மொழிபெயர்ப்பையும் அதைச் செய்த மாமேதையையும்... அவர் பாணியில் சொன்னால் சமீபத்தில் ஓராண்டுக்கு முந்தைய பதிவில் பின்னூட்டமிடுகிறேன்.

சினிமா பற்றியே பொழிந்திருப்பீர்கள் என்று வருமுன் எண்ணினேன். நொய்டாவில் துவங்கி பல தகவலகள் அருமை. ஏன் நிருத்திவிட்டீர்களோ??

Arun Ambie said...

இதை முக நூலில் பகிர்கிறேன்.

Cinema Virumbi said...

நன்றி அருண் அம்பி!

அலுவலகத்தில் ஒரு வருடமாகத் தலைக்கு மேல் வேலை! அதனால்தான் வலைப்பூ பக்கத்தில் கூட வர முடியவில்லை!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...